-
சிதம்பரத்தில் ராமர் கோவில்!
கோவில் நகரமான சிதம்பரம் நகரம் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டிற்கும் பெயர் பெற்றது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடல் வல்லான் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜபெருமானையும், சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். வேறு எங்கும் இது போன்று காண முடியாது. ஸ்ரீ கோதண்டராமர் கோவில்! சிதம்பரம் மேலரத வீதியில் பேரூந்து நிறுத்தம் அருகே சிறை மீட்ட விநாயகர் கோவிலை அடுத்து நூற்றாண்டு கண்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ…
-
சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மகம் கோலாகலம்!
மாசி மாதத்தில் மிகவும் புண்ணியமான முக்கியமான நாளாக போற்றப்படுவது மாசி மகம். புனித நீராடுவதற்கும், பாவங்கள் தீரவும்,முன்னோர்கள் சாபம் விலகவும் வழிபடுவதற்கான மிக உன்னதமான நாள் மாசி மகத்திருநாளாகும். ஒவ்வொரு மாதங்களிலும் வரும் பௌர்ணமியை ஒவ்வொரு தெய்வத்திற்குரிய விரத நாளாக கொண்டாடுகிறோம். அதே போல் மாசி மாத பௌர்ணமியை பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்களை பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் விழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி…
-
திருநாங்கூர் கருட சேவை உற்சவத்தின் போது 11 பெருமாள்களை ஒருங்கே தரிசிக்கலாம்.
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் “திருமணிமாடம்” அல்லது “திருமணிமாடக் கோவில்” எனப்படும் சாச்வததீப நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோவிலாகும். 108 திவ்ய தேசங்களில் ஆறு கோவில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோவில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருநாங்கூரில் கருட சேவை உற்சவம். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் சன்னதியில் நடைபெறும் கருட சேவை திருவிழாவிற்கு திருநாங்கூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 11 கோவில்களில்…
-
காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில்.
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள் வரிசையில் எழுபதாவது தலமாகவும், முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்(ஸ்ரீவாஞ்சியம்)காசிக்கு சமமாக கருதப்படுகிறது. திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்தில் இருந்து புறப்பட்டு பிரளயத்தில் அழியாது தப்பிய காசியை பார்த்து வியந்தனர்.அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளது என்று தேடி வந்தனர். அப்போதுதான் காவிரி கரையில் திருவாஞ்சியம் என்ற ஊரை கண்டு…
-
கருக்காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவில்.
தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் தரிசிக்க வேண்டிய மகத்துவமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் தரிசிக்க வேண்டிய கோவிலான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திருக்கருகாவூரில் மிகவும் தொன்மையான புகழ்பெற்ற அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும்,கும்பகோணத்திற்கு தென் மேற்கில்…
-
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள தச தீர்த்தங்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றி தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாக போற்றப்படும் தச தீர்த்தங்கள் உள்ளன. இந்த தச தீர்த்தங்களில் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தச தீர்த்தங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். சிவகங்கை: தீர்த்தம் என்பது சிவகங்கையே என குமரகுருபர சுவாமிகளால் போற்றப்பட்ட தீர்த்தம். தென்புறத்தில் ஆதிமூலநாதர் கோவிலையும், மேற்புறத்தில் நூற்றுக்கால் மண்டபத்தையும்,சிவகாமி அம்மை திருக்கோவிலையும்,வடபுறத்தில் நவலிங்கம் திருக்கோவிலையும், கீழ்ப்புறத்தில் ஆயிரம் கால் மண்டபத்தையும் எல்லையாக கொண்டு அவற்றின் இடையே அமைந்துள்ளது…
-
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் வள்ளலார்.
“வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்” என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் ராமலிங்க அடிகளார்.வள்ளலார் என அடியார்களால் அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் இறைவனை ஜோதி வடிவமாக கண்டு வழிபட்டு ஜோதியில் ஐக்கியமானவர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதே வள்ளலார் உலக மக்களுக்காக அளித்த மிக சிறந்த மந்திரமாகும்.இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அகத்திலும், புறத்திலும் இருக்கின்ற தீவினைகள் அகலும். ஜீவகாருண்யம் பெருகும். நோய்,நொடிகள் ஏதும் நம்மை அன்டாது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்…
-
கலை நயமிக்க கங்கைகொண்ட சோழபுரம்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது கலை நயமிக்க கங்கைகொண்ட சோழபுரம். கங்கை ஆறு வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்று நகரத்தை முதலாம் ராஜேந்திரன் சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மகன் ஆவான். ராஜராஜ சோழனுக்கும், திரிபுவன தேவிக்கும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன். இவனின் இயற்பெயர் மதுராந்தகன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிட…
-
மகான்களை கவர்ந்திழுக்கும் காந்த மலை திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருத்தலம் அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. “அருணம்” என்றால் நெருப்பு, “அசலம்”என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது.அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பார்கள் பெரியவர்கள்.இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாச்சலமாகக் காட்சி அளிக்கிறது. இம்மலையின் பெயரை அடிக்கடி சொல்லி வருவது ஓம் நமசிவாய கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம்.திருவண்ணாமலை என்றாலே மலை தான் ஞாபகத்திற்கு வரும். அதுவும் ஈசனே மலையாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின்…
-
ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் கோவில்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எம பயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தர்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடமிருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு…
