
சிதம்பரத்தில் மழை வேண்டி மழைப் பதிகங்கள் பாடி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை.இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகின்றன. விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனையொட்டி ஆலய வல இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் குளக்கரையில் உள்ள ஸ்ரீ குபேர பைரவர் கோயிலில் மழைப்பதிகங்கள் பாடி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சமூக ஆர்வலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பாடல்களை தொகுத்து
உழவாரப்பணி தில்லை மு. கருணாநிதி பாடினார். அவருடன் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு மழை பதிகங்களை பாடி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்கள் ராகவன், சிவச்சந்திரன், அருள்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ குபேர பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் குரல் அருணாசலம் செய்திருந்தார்.