
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சீர்காழி சாலையில் உள்ள சபாநாயகர் தெருவில் அமைந்தள்ளது ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருமடலாயம். இது முருகப்பெருமான் மற்றும் பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளின் வழிபாட்டுத் தலமாக உள்ளது. இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சாயலில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் 115ம் ஆண்டு கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு கணபதி வேள்வி பூஜையும், பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தீபாராதனை மற்றும் மகேஸ்வர பூஜையும், பின்னர் முருகர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நவ.15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காவடி மற்றும் திருத்தேர் வீதிஉலா நிகழ்ச்சியும், மகாபிஷேகம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நவ.16-ம் தேதி திங்கள்கிழமை காலை திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.