சிதம்பரத்தில் நவம்பர் 10ம் தேதி மின் நுகர்வோர் குறை கேப்புக்கூட்டம்! உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்!!


மின் கட்டண பிரச்சனைகள், மின்தடை, புதிய இணைப்பு தாமதம் உள்ளிட்ட மின்வாரியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிதம்பரம் கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறை கேட்புக் கூட்டம் நவ.10-ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிதம்பரம் கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் எம்.சி.கண்ணகி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சிதம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும். அந்த வகையில் நவ.10-இல் நடைபெறும் கூட்டத்தில் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகள் அண்ணாமலைநகர், சி.முட்லூர், கிள்ளை, பிச்சாவாரம், பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், சாமியார்பேட்டை, வயலாம்பூர், பூவாலை, புவனகிரி, குறியாமங்களம், சாத்தப்பாடி, கீரப்பாளையம், அம்மாபேட்டை, வல்லம்படுகை, வக்காரமாரி, கருப்பூர், குமராட்சி, சிறகிழந்தநல்லுார், முள்ளங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளார்.