
பிறவி குறைபாட்டினாலோ, நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஒருவர் செயல் சுதந்திரம் பாதிக்கப்படும் போது அந்த பாதிப்புகளை ஆராய்ந்து தகுந்த சிகிச்சையளிப்பது தொழில்முறை சிகிச்சை மருத்துவ முறையாகும். உலக தொழில் முறை சிகிச்சை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தொழில் முறை சிகிச்சை துறையில், உலகம் தொழில் முறை சிகிச்சை தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் என். பாஸ்கர் தொடங்கி வைத்து தொழில்முறை சிகிச்சை குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பேசினார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர்சுந்தரேஷ், துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன், டாக்டர் அசோக்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக இந்திய தொழுநோய் சேவை நிறுவன திட்ட மேலாளர் டாக்டர் மணிவண்ணன், தொழுநோய் சிகிச்சையில் தொழில்முறை சிகிச்சையின் பங்கு பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவிலிருந்து வல்லுநர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.