அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம் பெற்ற சிதம்பரம் மாணவிக்கு தமிழக முதல்வர் விஜய் பாராட்டு!


பிளஸ் 2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம் பெற்ற சிதம்பரம் மாணவிக்கு தமிழக முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். சிதம்பரம் மந்தகரை பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளி மாணவர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிக மதிப்பெண்கள் பெறுவது வழக்கம்.

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி!

கடந்த மார்ச் 2026 ல் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 592 ம்,  நான்கு பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்களுடன் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவி பா.அலமேலுவுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பரிசு வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.  அப்போது மாணவியின் பெற்றோர் உடன் இருந்தனர்!

சிதம்பரம் நகரை சார்ந்த அலமேலு தற்போது கடலூர் கிருஷ்ணசாமி கலைக் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். உயர்கல்வியில் பட்டயக் கணக்காயர்(சிஏ) பயில வேண்டும் என்பதே தனது லட்சியம் என தெரிவித்தார்!