-
மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!
வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம், பூவுக்கு வாசம் உண்டு,பூமிக்கும் வாசம் உண்டு, வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே, வெட்டி வேரு வாசம் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் வெட்டி வேரை பார்த்தாலே நினைவுக்கு வருகிறது. நறுமணம் வீசும் வெட்டிவேர் மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள் நடராஜருக்கு சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் பிரபலமாக உள்ளது.பூக்கள் மட்டும் தான் வாசனை வீசும் என நாம் நினைக்கிறோம். ஆனால் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால்…