-
தனிச்சிறப்பு பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி.
சிவ வழிபாட்டு தலங்களில் மிகப் பழமையானதும் உன்னதமானதுமான ஒரு தலமாக சிதம்பரம் விளங்குகிறது. சைவ தத்துவ அடிப்படையிலும், சமய பாரம்பரியத்திலும், பஞ்ச பூதங்களும் சிவனின் அம்சங்களாக கருதப்படுகின்றன. உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆகாச வடிவமாக இறைவன் வணங்கப்படுகிறார். ஆகாசம் என்பது தூய்மையான உணர் அறிவையும், உண்மை அறிவையும் குறிப்பதாகும். இங்கே உள்ள திருக்கோயில் பல்வேறு ஆன்மீக உண்மைகளை சுட்டிக்காட்டும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் நின்றாடும் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக்…