-
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்.
இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும் மகா சிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். சிவராத்திரி என்ற பெயர் வரக்காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவு பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார்.நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் விதிப்படி அர்ச்சனை…