-
சிதம்பரம் அருகே பொங்கலை முன்னிட்டு கரும்புகள் அறுவடை தீவிரம்
பொங்கல் பண்டிகை என்றாலே இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள கரும்புகள் தான் ஞாபகத்திற்கு வரும்.. தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பன்னீர் கரும்புகள் என கூறப்படும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே கடவாச்சேரி, பெராம்பட்டு, வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், எருக்கன் காட்டுபடுகை, மற்றும் வீராணம் ஏரிக்கரையில் உள்ள வாழக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்புகள் சாகுபடி…