-
சிதம்பரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னி திருவிழா. கிராம மக்கள் கும்மியடித்து கொண்டாட்டம்.
காலம் மாறினாலும் பாரம்பரிய வழக்கப்படி சில கிராமங்களில் தொன்றுதொட்டு திருவிழாக்கள் கைவிடப்படாமல் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்தில் பல தலைமுறைகளாக கன்னி திருவிழா என்ற பெயரில் ஒரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கன்னி திருவிழா உற்சாகமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயம் செழித்து மக்கள் வளமாக இருக்க…