Tag: kaatumanaar koil keezha kadambur

  • பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றிருந்த கடம்பூர் மாளிகை.

    இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையன் வந்தியத்தேவனுடைய குதிரை இப்பொழுது நல்ல சுறுசுறுப்பை பெற்றிருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்து விட்டது. அந்தக் காலத்து சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையரும் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இரு புறத்திலும் எழுந்த நெடுஞ்சவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன. என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் கடம்பூர் மாளிகை…