-
முட்செடி இழுத்தது! வானத்தில் கருடன் வட்டமிட்டது!! பல்கலைக்கழகம் மலர்ந்தது.
லட்டச்கணக்கான இளைஞர்களின் அறிவுக்கண்களை திறந்து கல்வி புரட்சி ஏற்படுத்திய அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செட்டிநாடு புகைவண்டி நிலையத்தின் ஊடே கானாடுகாத்தான் என்ற புகழ்பெற்ற ஊர் உள்ளது. கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்ற ஊராகும். இவ்வூரில் திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து அப்பொருளை இறைவனுக்கு ஆலயம் அமைத்து மகிழும் தனவான்கள் பலர் உள்ளனர்.அம்மரபு வழி வந்த அண்ணாமலை செட்டியார் 1910ம் ஆண்டில் பிரிட்டனில் தங்கி கேம்பிரிட்ஜ் மற்றும்…