-
சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் களைகட்டும் ஐப்பசிப் பூரவிழா.
பூலோக கயிலாயம் எனவும் கோயில் எனவும் போற்றப்படுவது பெரும்பற்றபுலியூர் என்னும் சிதம்பரமாகும். ஆகாய ஸ்தலமான சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தில் சிவபெருமான் ஆனந்தத் திருக்கூத்தினை எக்காலத்திலும் நிகழ்த்தியருள்கின்றார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு தனித்த பெரிய கோயில் உள்ளது. இக்கோயில் வடக்கு கோபுரம் செல்லும் வழியில் நூற்றுக்கால் மண்டபத்தையடுத்து சிவகங்கை தீர்த்தத்தின் மேல் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டு பிரகாரங்களை உடைய பெரிய கோயிலாக அமைந்துள்ளது. இது கி.பி.1118-1136ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த விக்கிரம சோழன் காலத்தில்…