-
தேசபக்தியிலும் சிதம்பரத்திற்கு தனி இடமுண்டு.
ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்றது போல் தேசபக்தியிலும் சிதம்பரத்திற்கு தனி இடமுண்டு. சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தில் இருந்த காந்தி ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதேபோன்று சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய சுவாமி சகஜானந்தா 1934 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி காந்தியடிகளை அழைத்து வந்து சிதம்பரம் ஓமகுளம் பகுதியில் அவரது திருக்கையினால் சிவலோகநாதர் சிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட செய்து பெருமை சேர்த்துள்ளார்.தற்போது அந்த பழமை வாய்ந்த கோயில் கருங்கல்…
-
சிதம்பரம் அருகே வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு! மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் திருச்சி மாவட்டம் கல்லணை, தஞ்சை மாவட்டம் கீழணை வழியாக கடலூர் மாவட்டம் கடைமடை பகுதியாக உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் அதிக…