-
சிதம்பரம் அருகே பொங்கலை முன்னிட்டு கரும்புகள் அறுவடை தீவிரம்
பொங்கல் பண்டிகை என்றாலே இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள கரும்புகள் தான் ஞாபகத்திற்கு வரும்.. தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பன்னீர் கரும்புகள் என கூறப்படும் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரம் அருகே கடவாச்சேரி, பெராம்பட்டு, வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், எருக்கன் காட்டுபடுகை, மற்றும் வீராணம் ஏரிக்கரையில் உள்ள வாழக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கரும்புகள் சாகுபடி…
-
மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்!
பேருந்துகளில் கிராம பகுதிகளில் செல்லும் போது மண் சட்டியில் குழம்பு வைக்கும் வாசனை காற்றில் வரும் போது நம் மூக்கை துளைப்பதோடு நம் பசியை தூண்டும். மண்பாண்டங்களில் செய்யும் பொருட்களுக்கு வாசமும்,ருசியும் அதிகம். இன்றும் கிராமங்களில் நிறைய குடும்பங்கள் மண் பாண்டங்களை உபயோகப்படுத்தி சமைத்து வருகின்றனர். தமிழகத்தில் கிராமபுறங்களில் உள்ள உணவகங்களில் மண் அடுப்புகளில் மண்பாண்டங்களை கொண்டு சமைப்பதை காணலாம். தற்போது பேப்பர் தட்டுகள், பேப்பர் கப்புகள், அலுமினியம் மற்றும் சில்வர் பாத்திரங்களின் உபயோகம் அதிகரிப்பால் மண்பாண்ட…
-
இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம்.
உலகின் வெப்பம் மற்றும் மித மண்டலப் பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காடுகள், கடல் கரையோரங்களில் கானப்படும் சதுப்பு நிலக்காடுகளில் தோன்றும் தாவரங்கள் சதுப்புநில தாவரங்கள் (Mangrove forest) என அழைக்கப்படுகின்றன. இவை அலையாத்தி காடுகள் என்றும் கூறப்படுகிறது.கடும் புயல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கக்கூடிய சக்தி சதுப்பு நிலக்காடுகளுக்கு உள்ளது. அந்த வகையிலே உலகிலேயே கொல்கத்தாவில் உள்ள சுந்தர்பன் அலையாத்தி காடுகள் மிகப்பெரியது என கூறப்படுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம்…
-
திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில்.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் விஷ்ணுவையும், சிவபெருமானையும் ஒரே இடத்தில் நின்று வழிபடலாம். வேறு எந்த கோயிலிலும் இந்த அதிசயத்தைக் காண முடியாது. அம்பலத்தில் ஆடும் தில்லைக் கூத்தனையும், யோகசயனத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்று வழிபடலாம் தில்லை திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 23வது திருப்பதியாக உள்ளது. பிராட்டியைத் திருமார்பில் கொண்ட பெருமானை சிந்தையில் வைப்பதற்காக காயையும்,…
-
துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக விநாயகர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய(Aether) ஸ்தலமாக விளங்குவது புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் நடுநாயகமாக ஆடல்வல்லான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. சிதம்பரம் கோயிலில் நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் சென்று நடராஜரை தரிசனம் செய்ய முடியும். நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும் போது முதற்கண் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடும் வகையில் அமைந்த ஒரு அற்புத தலம் சிதம்பரம்.…