-
அழியாமல் பாதுகாக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்.
இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி வகை’ ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். மிகவும் சிறிய உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டையிடுவதால் பங்குனி ஆமைகள் என்று தமிழில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் olive Ridley sea turtle என்றும் தமிழில் ஒலிவ நிறச் சிற்றாமை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் zoological name Lepidochelys olivacea எனக் கூறப்படுகிறது. இந்த சிற்றாமைகளால் கடலின்…
-
மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!
வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம், பூவுக்கு வாசம் உண்டு,பூமிக்கும் வாசம் உண்டு, வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே, வெட்டி வேரு வாசம் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் வெட்டி வேரை பார்த்தாலே நினைவுக்கு வருகிறது. நறுமணம் வீசும் வெட்டிவேர் மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள் நடராஜருக்கு சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் பிரபலமாக உள்ளது.பூக்கள் மட்டும் தான் வாசனை வீசும் என நாம் நினைக்கிறோம். ஆனால் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால்…
-
மாசி மகத்தன்று பெருமாளை வரவேற்கும் இஸ்லாமியர்கள்.
இறை வழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். மாசி மகம் என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளாகும். இந்த மாசி மகம் இந்துக்களால் விரதம் இருந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்னாளில் கடல், குளம்,ஆறு ஆகிய நீர் நிலைகளில் புண்ணிய நதியான கங்கையும் கலந்திருப்பதாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. இதனால் மாசி மகத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மேலும்…
-
தீரா நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரர்.
பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச!ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்!!! தையல் நாயகி உடனுறை வைத்தியநாதரின் இந்த அஷ்டகத்தை தினமும் மும்முறை உச்சரித்தால் எப்பேர்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம் எனக் நம்பப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ளது புள்ளிருக்கு வேளூர் என கூறப்படும் வைத்தீஸ்வரன் கோயில். சீர்காழியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் செவ்வாய்க்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த…
-
தனிச்சிறப்பு பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி.
சிவ வழிபாட்டு தலங்களில் மிகப் பழமையானதும் உன்னதமானதுமான ஒரு தலமாக சிதம்பரம் விளங்குகிறது. சைவ தத்துவ அடிப்படையிலும், சமய பாரம்பரியத்திலும், பஞ்ச பூதங்களும் சிவனின் அம்சங்களாக கருதப்படுகின்றன. உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆகாச வடிவமாக இறைவன் வணங்கப்படுகிறார். ஆகாசம் என்பது தூய்மையான உணர் அறிவையும், உண்மை அறிவையும் குறிப்பதாகும். இங்கே உள்ள திருக்கோயில் பல்வேறு ஆன்மீக உண்மைகளை சுட்டிக்காட்டும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் நின்றாடும் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக்…
-
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்.
இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும் மகா சிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். சிவராத்திரி என்ற பெயர் வரக்காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவு பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார்.நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் விதிப்படி அர்ச்சனை…
-
தைப்பூச நன்நாளில் ஆனந்த நடனமாடிய நடராஜர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா என்றதும் எல்லோருக்கும் திருவாதிரை ஆருத்ரா திருவிழாவும், ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நினைவுக்கு வரும். ஆனால் நடராஜர் சிதம்பரத்தில் திரு நடனம் புரிய தொடங்கிய நாள் தைப்பூச நன்னாளாகும். கயிலை மலைச்சாரலில் வெவ்வேறு இடங்களில் இருந்து பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகிய முனிவர்கள் தவம் செய்து வந்தனர். பல இடங்களில் இருந்தாலும் அவர்களுக்கு நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தது. அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அன்பர்களே…
-
சிதம்பரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னி திருவிழா. கிராம மக்கள் கும்மியடித்து கொண்டாட்டம்.
காலம் மாறினாலும் பாரம்பரிய வழக்கப்படி சில கிராமங்களில் தொன்றுதொட்டு திருவிழாக்கள் கைவிடப்படாமல் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிராமத்தில் பல தலைமுறைகளாக கன்னி திருவிழா என்ற பெயரில் ஒரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் கன்னி திருவிழா உற்சாகமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயம் செழித்து மக்கள் வளமாக இருக்க…
-
வெளிநாட்டு பக்தர்களை கவர்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்.
ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலானது மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுவமாகும். சிவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது. சிவ வழிபாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்திலிருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். இது மட்டுமல்ல கோயில் என்றாலே அது சிதம்பரம் தலத்தை தான் குறிக்கும் என்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொற்கூறையின் கீழ் ஆனந்த தாண்டவ கோலத்தில் அம்பிகையுடன் அருள்பாளித்து வருகின்றார். ஒரு காலை தூக்கி…