-
சிவபுரி பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைப்பதாக ஐதீகம்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது சிவபுரி கிராமம். இக்கிராமத்தில் வேதநாயகி சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இந்த ஊரின் புராண பெயர் திருக்கழிப்பாலை என கூறப்படுகிறது. கொள்ளிடக் கரையில் உள்ள இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் தான். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போனதால் வென்னிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.…
-
27 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி. மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் தனியாக செயல்பட்டு வருகின்றது.1979ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் ஏற்புடையது அல்ல என அறிவித்தது.இதனால் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து மாணவர்…
-
பெருக்கெடுத்து வரும் காவிரி நீரை வரவேற்கும் ஆடிப்பெருக்கு விழா.
ஆடிப்பெருக்கென்று சோழ நாட்டு நதிகலெல்லாம் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம். “வடகாவேரி” என்று பக்தர்களாலும், “கொள்ளிடம்” என்று பொதுமக்களாலும் பெயரிடப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் கல்கியால் ஆடிப்பெருக்கு விழா குறித்து…
-
திருநீலகண்ட நாயனாரை இளமைப் பெற செய்த ஸ்தலம்.
சிவத்திருத்தலங்களுள் சிறந்தது சிதம்பரம் ஸ்தலம்.சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி பல பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரம் மையப்பகுதியில் அமைந்துள்ள திருப்புலீச்சுரம் கோயில். சிதம்பரம் ஸ்தலத்திற்குரிய தீர்த்தங்கள் பத்து. இதில் நான்காவது தீர்த்தமாகிய வியாக்ரபாத தீர்த்தம் இத்திருக்கோயிலின் முன்பு உள்ள திருக்குளம்.திருஞானசம்பந்தரால் திருப்புலீச்சுரம் என்று பாடப்பட்ட திருக்கோயில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஆன்மார்த்தமாக பூஜை செய்த தலம் திருப்புலீச்சுரம் கோயில். இக்கோயில் மூர்த்தி,தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்படையுது.சிதம்பரம் நடராஜர்…
-
முட்செடி இழுத்தது! வானத்தில் கருடன் வட்டமிட்டது!! பல்கலைக்கழகம் மலர்ந்தது.
லட்டச்கணக்கான இளைஞர்களின் அறிவுக்கண்களை திறந்து கல்வி புரட்சி ஏற்படுத்திய அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செட்டிநாடு புகைவண்டி நிலையத்தின் ஊடே கானாடுகாத்தான் என்ற புகழ்பெற்ற ஊர் உள்ளது. கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்ற ஊராகும். இவ்வூரில் திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து அப்பொருளை இறைவனுக்கு ஆலயம் அமைத்து மகிழும் தனவான்கள் பலர் உள்ளனர்.அம்மரபு வழி வந்த அண்ணாமலை செட்டியார் 1910ம் ஆண்டில் பிரிட்டனில் தங்கி கேம்பிரிட்ஜ் மற்றும்…
-
ஆகாய தலத்தில் ஆனந்த திருநடனம் புரியும் நடராஜர்.
பொதுவாக கோயில் என்று சொன்னாலே திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை தான் குறிக்கும். ‘சைவர்கள் கோயில்’ என்றாலே இத்தலத்தையே குறிக்கப் பெறும் அளவிற்குத் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும்.பஞ்சபூத தலங்களில் இது ஆகாய தலமாக விளங்குகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது. சென்னைக்கு தெற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. மதுரையில்…
-
திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் சீர்காழி.
பிரம்மபுரம்,வேணுபுரம் முதலிய பன்னிரு திருப்பெயர்களைப் பெற்றதும், திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்து உமையம்மை அளித்த சிவஞானப்பாலமுதுண்டு உலகமுய்ய தேவாரம் அருளிச் செய்யத் தொடங்கியதுமாகிய திருத்தலம் சீர்காழி.சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தாலுகாக்களில் ஒன்றாய் விளங்குவது சீர்காழி. தருமபரம் ஆதினத்திற்கு சொந்தமான 27 தேவஸ்தானங்களில் ஒன்றாய் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது இத்திருக்கோயில். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரம் எனவும், இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றி சூரபத்மனுக்கு அருள் செய்தமையால் வேணுபுரம் எனவும், அசுரர்கட்குப் பயந்த தேவர்களின்…
-
திருவாரூரில் அஜபா நடன மூர்த்தியாக திகழும் தியாகராஜர்.
பஞ்ச பூதங்களே நம்மை ஆள்பவன. இறைவன் பஞ்ச பூதமாகவே இருந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். இப்பஞ்ச பூதங்கள் இல்லை என்றால், உலகம் இயங்காது. உயிர்கள் கிடையாது. அனைத்திற்கும் மூலக் காரணமே இப்பஞ்ச பூதங்களாகிய நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள்தான். இவற்றை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில்,அந்தந்த பூதங்களாக அருளாட்சி செய்து வருகிறார். மண் தலமாகிய நிலத்திற்கு இரு தலங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று காஞ்சிபுரம், மற்றொன்று திருவாரூர். திருவாரூரில் பிறக்க முக்தி! தில்லையில் இருக்க முக்தி!!திருவண்ணாமலையை…
-
அழியாமல் பாதுகாக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள்.
இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி வகை’ ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். மிகவும் சிறிய உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டையிடுவதால் பங்குனி ஆமைகள் என்று தமிழில் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் olive Ridley sea turtle என்றும் தமிழில் ஒலிவ நிறச் சிற்றாமை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் zoological name Lepidochelys olivacea எனக் கூறப்படுகிறது. இந்த சிற்றாமைகளால் கடலின்…
-
மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள்!சிதம்பரத்தில் பிரபலம்!!
வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம், பூவுக்கு வாசம் உண்டு,பூமிக்கும் வாசம் உண்டு, வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே, வெட்டி வேரு வாசம் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் வெட்டி வேரை பார்த்தாலே நினைவுக்கு வருகிறது. நறுமணம் வீசும் வெட்டிவேர் மனமும், நிறமும் மாறாமல் இருக்கும் வெட்டிவேர் மாலைகள் நடராஜருக்கு சூட்டப்படுவதால் சிதம்பரத்தில் பிரபலமாக உள்ளது.பூக்கள் மட்டும் தான் வாசனை வீசும் என நாம் நினைக்கிறோம். ஆனால் செடி மட்டுமல்ல. அதன் வேர் கூட வாசனை தருகிறது என்றால்…