-
கருக்காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவில்.
தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் தரிசிக்க வேண்டிய மகத்துவமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் தரிசிக்க வேண்டிய கோவிலான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திருக்கருகாவூரில் மிகவும் தொன்மையான புகழ்பெற்ற அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இக்கோவில். தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும்,கும்பகோணத்திற்கு தென் மேற்கில்…
-
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள தச தீர்த்தங்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றி தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களாக போற்றப்படும் தச தீர்த்தங்கள் உள்ளன. இந்த தச தீர்த்தங்களில் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தச தீர்த்தங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். சிவகங்கை: தீர்த்தம் என்பது சிவகங்கையே என குமரகுருபர சுவாமிகளால் போற்றப்பட்ட தீர்த்தம். தென்புறத்தில் ஆதிமூலநாதர் கோவிலையும், மேற்புறத்தில் நூற்றுக்கால் மண்டபத்தையும்,சிவகாமி அம்மை திருக்கோவிலையும்,வடபுறத்தில் நவலிங்கம் திருக்கோவிலையும், கீழ்ப்புறத்தில் ஆயிரம் கால் மண்டபத்தையும் எல்லையாக கொண்டு அவற்றின் இடையே அமைந்துள்ளது…
-
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் வள்ளலார்.
“வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்” என தாவரங்களையும் சக உயிர்களாக நினைத்து உருகியவர் ராமலிங்க அடிகளார்.வள்ளலார் என அடியார்களால் அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் இறைவனை ஜோதி வடிவமாக கண்டு வழிபட்டு ஜோதியில் ஐக்கியமானவர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதே வள்ளலார் உலக மக்களுக்காக அளித்த மிக சிறந்த மந்திரமாகும்.இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அகத்திலும், புறத்திலும் இருக்கின்ற தீவினைகள் அகலும். ஜீவகாருண்யம் பெருகும். நோய்,நொடிகள் ஏதும் நம்மை அன்டாது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்…
-
கலை நயமிக்க கங்கைகொண்ட சோழபுரம்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது கலை நயமிக்க கங்கைகொண்ட சோழபுரம். கங்கை ஆறு வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்று நகரத்தை முதலாம் ராஜேந்திரன் சோழன் அமைத்ததாக கூறப்படுகிறது. மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மகன் ஆவான். ராஜராஜ சோழனுக்கும், திரிபுவன தேவிக்கும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன். இவனின் இயற்பெயர் மதுராந்தகன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிட…
-
மகான்களை கவர்ந்திழுக்கும் காந்த மலை திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருத்தலம் அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. “அருணம்” என்றால் நெருப்பு, “அசலம்”என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது.அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பார்கள் பெரியவர்கள்.இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாச்சலமாகக் காட்சி அளிக்கிறது. இம்மலையின் பெயரை அடிக்கடி சொல்லி வருவது ஓம் நமசிவாய கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம்.திருவண்ணாமலை என்றாலே மலை தான் ஞாபகத்திற்கு வரும். அதுவும் ஈசனே மலையாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின்…
-
ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் கோவில்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எம பயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தர்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடமிருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு…
-
10ம் வகுப்பு கல்வி தகுதியில் சுரங்கப் பொறியியல் பட்டயப்படிப்பு. காத்திருக்கிறது மத்திய அரசு பணி.
வெறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறிருந்தால் சுரங்கப் பொறியியல் பட்டயப் படிப்பு(Diploma) படிக்கலாம். இந்த படிப்பிற்கு மத்திய அரசு பணி உள்ளிட்ட ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. சுரங்கப் பொறியியல் என்றால் என்ன? சுரங்கம் என்பது பூமியில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்து அகற்றுவதை உள்ளடக்கிய பொறியியல் துறை. சுரங்கம் மனித குலத்தின் பழமையான மற்றும் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் அது நம்மைச் சுற்றியுள்ள உலகின் மூலப்பொருட்களை வழங்குகிறது மற்றும் விவசாயத்தை போலவே…
-
தில்லை எல்லையில் அருள்பாலித்து வரும் தில்லைக் காளியம்மன்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தி இப்பரந்த உலகின் அஷ்ட திக்கிலும் எண்ணுதற்கரிய திருத்தலங்களில் கோவில் கொண்டுள்ளார். காஞ்சியில் காமாட்சி கருணை வடிவமாகவும்,காசியில் விசாலாட்சி அருளே வடிவமாகவும், மதுரையில் மீனாட்சி அரசாட்சி கொண்டமையாகவும் விளங்குகின்றனர். திருச்சியில் மாரியம்மனாகவும், திருவேற்காட்டில் கருமாரியம்மனாகவும், திருவொற்றியூரில் வடிவுடை நாயகியாகவும், சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,தில்லைக் காளியாகவும், தில்லையம்மனாகவும் கோவில் கொண்டுள்ளார் பார்வதிதேவி. ஆதிகாலத்தில் சிதம்பரம் தில்லை செடிகள் புதர் போல் வளர்ந்து தில்லை வனமாக விளங்கியது. தில்லையின் நடுநாயகனாக விளங்கும் பொன்னம்பலத்தான் வீற்றிருக்கும்…
-
வரலாற்றுப் பெருமைகள் கொண்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சென்னையிலிருந்து சுமார் 217 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரமும், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் ரயில் நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேருந்து வசதி உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம்…
-
கேட்ட வரம் தரும் கீழத்தெரு மாரியம்மன்.
பூலோக கைலாயம் என வர்ணிக்கப்படும் சிதம்பரம் முன்னொரு காலத்தில் தில்லை வனமாக காட்சியளித்தது. அசுரர்கள் தில்லை நகருக்குள் நுழையாமல் இருக்க தெற்கே வெள்ளந்தாங்கி அம்மனும், மேற்கே எல்லையம்மனும்,வடக்கே தில்லையம்மனும்,கிழக்கே மாரியம்மனும் இருந்து காத்தருள சிவபெருமான் கட்டளையிட்டதாக புராண வரலாறு கூறுகிறது. அன்று முதல் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே அருள்பாலித்து வரும் மாரியம்மனுக்கு கீழத்தெரு மாரியம்மன் என பெயர் பெற்றது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. கருணையின் உருவமே, கலைகளின் வடிவமே எனப்…