Category: Uncategorized

  • சிதம்பரத்தில் அவதூத சுவாமிகள் ஜீவசமாதி.

    தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் பல மகான்கள் இங்கு தவமிருந்து இறைவனடி சேர்ந்துள்ளனர்.அப்படி பல காலம் சிதம்பரத்தில் தவமிருந்து இறைவனடி சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீஅவதூத சுவாமிகள். அவதூத சுவாமிகள் பல காலம் இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும் சுற்றித்திரிந்தும் தவத்தில் ஈடுபட்டும் இருந்து வந்துள்ளார்கள். இமயமலையில் அவதூத சுவாமிகளின்  குரு அவரை சிதம்பரம் செல்லுமாறு கூறியுள்ளார்கள். அப்போது குருவின் உத்தரவுபடி சிதம்பரம் புறப்பட்ட அவதூத சுவாமிகள் சிதம்பரம் வரும் வழியில் திருக்கோவிலூரில் உள்ள ஞானானந்தகிரி தபோவனத்தில் சில காலம் தங்கியிருந்தார்.…

  • நெய்வேலி மாநகரில் பளிங்கு சபையில் அருள் பாலிக்கும் நடராஜர்.

    சிதம்பரம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆடல்வல்லான் அருள்பாலிக்கும் நடராஜர் கோயில் தான். அதுபோல நெய்வேலி என்று சொன்னாலே நிலக்கரி நிறுவனமும், மிகப்பெரிய நடராஜர் சிலையும் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் உலோகச்சிலை இக்கோயிலில் அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 7அடி உயரத்தில் சிவகாமி தேவியின் சிலையும் இக்கோயிலில் அழகுற காட்சி தருகிறது. ஐவரால் அமைந்த பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகம். நெய்வேலியில் நடராஜர் கோயில் அமைந்ததே மிகவும் சுவாரஸ்யமானது.…

  • சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 100 அரிய தகவல்கள்.

    பூலோக கைலாயம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் 100 அரிய தகவல்களை தொகுத்து அளித்துள்ளோம்.

  • வளர்பிறை அஷ்டமி.

    சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவரை வழிப டுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோ றும் வரும் அஷ்டமி தினங்கள்.வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். அஷ்டமி தினம் அன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமா…

  • காசிக்கு நிகரான புண்ணியம்  தரும் திருவெண்காடு கோவில்.

    தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவெண்காடு. இங்குள்ள கோயிலில் பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றார்.இத்தலம் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம். “காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் கோயில்” என்ற பெருமை இதற்கு உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை, வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். காசியில் விஷ்ணு பாதம். திருவெண்காட்டில் ருத்ர பாதம். சந்திரத் தீர்த்தம்…

  • சிதம்பரம் அண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில்.

    “வீரமார்த்தாண்ட கூத்தாண்டவர்”என்று போற்றப்படும் அரவானுக்கு தமிழ்நாட்டில் பல கோவில்கள் இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. ஆனால் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டை கடந்த கூத்தாண்டவர் கோவில் என்றால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பகுதியில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவிலில் தான் என கூறுகின்றனர் முன்னோர்கள். இக்கோவில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இசைக் கல்லூரியின் அருகாமையில் அமைந்துள்ளது. ஐந்தாம் வேதமாக கருதப்படும்…

  • மருத்துவக் கடவுள் தன்வந்திரி.

    தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல் நலத்திற்காக வழிபடப்படும் கடவுள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரி வடிவம் தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ் வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது.சில சிவன்  கோவில்களிலும் தந்வந்திரிக்கு சந்நதி உள்ளது.தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். சிவன் கோவில்களில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது. மக்களை காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில்…

  • மருத்துவ குணங்கள் நிறைந்த முசுமுசுக்கை

    முசுமுசுக்கை என்பது ஒரு கொடி வகையைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் முகியா மேடரசுபட்டானா (Mukia maderaspatana). சிறுக்கொடி தாவரமான முசுமுசுக்கை சொரசொரப்பான சுனைகள் கொண்டது. இதன் இலைகள் மற்றும் வேர்களை தொட்டால் முசுமுசுவென இருப்பதால் இதற்கு முசுமுசுக்கை என பெயர் பெற்றது.இதன் இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முசுமுசுக்கை சாதாரணமாக வேலிகள், புதர்களில் பெருமரங்களை சுற்றி வளர்கின்றது. ஏதேனும் ஒரு பிடிப்பை பற்றி கொண்டு கொடியாக படர்ந்து பசுமையாக மிதந்து செல்லும் மூலிகை…

  • சிதம்பரத்தில் ராமர் கோவில்!

    கோவில் நகரமான சிதம்பரம் நகரம் சைவம் மற்றும் வைணவம் ஆகிய  இரண்டிற்கும் பெயர் பெற்றது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடல் வல்லான் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜபெருமானையும், சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். வேறு எங்கும் இது போன்று காண முடியாது. ஸ்ரீ கோதண்டராமர் கோவில்! சிதம்பரம் மேலரத வீதியில் பேரூந்து நிறுத்தம் அருகே சிறை மீட்ட விநாயகர் கோவிலை அடுத்து நூற்றாண்டு கண்ட  மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ…

  • சிதம்பரம் அருகே கிள்ளையில் மாசி மகம் கோலாகலம்!

    மாசி மாதத்தில் மிகவும் புண்ணியமான முக்கியமான நாளாக போற்றப்படுவது மாசி மகம். புனித நீராடுவதற்கும், பாவங்கள் தீரவும்,முன்னோர்கள் சாபம் விலகவும் வழிபடுவதற்கான மிக உன்னதமான நாள் மாசி மகத்திருநாளாகும். ஒவ்வொரு மாதங்களிலும் வரும் பௌர்ணமியை ஒவ்வொரு தெய்வத்திற்குரிய விரத நாளாக கொண்டாடுகிறோம். அதே போல் மாசி மாத பௌர்ணமியை பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்களை பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் விழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி…