-
ஆச்சாள்புரம் கோயிலுக்கு சென்றால் திருமணம் தடை நீங்கும்!
காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம் திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற பெருமை பெற்ற இத்தலம், இன்றைய நாளில் ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில் திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகேசர் அருள்பாலித்து வருகின்றார்.இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் வருகை தந்து “கல்லூர்ப் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடினார். தனது வாழ்நாளில் சம்பந்தர் பாடிய “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தொடங்கும் கடைசிப் பதிகமும் இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும்…
-
பாசுபதேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்!
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் முதல் தலம் என்ற சிறப்புக்குரியது சிதம்பரம் நடராஜர் கோவில். இரண்டாவது தலமாக சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோவில் கூறப்படுகிறது. ஆதி காலத்தில் சிதம்பரம் தில்லை வனமாகவும், திருவேட்களம் மூங்கில் வனமாகவும் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது திருவேட்களம். இங்கு பழமை வாய்ந்த பாசுபதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நல்லநாயகி சமேத ஸ்ரீ பாசுபதேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றார்.இக்கோயில் குறித்து சம்பந்தர் அப்பர்…
-
நார் சத்து நிறைந்தது நாவல் பழம்.
இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. தற்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் சாப்பிடலாம். நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை…
-
ஆடிமாதம்
ஆடி மாதம் என்பது இந்து மத தெய்வங்களை வழிபட முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். தெய்வீகமான இம்மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் சரியான முறையில் வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வமும் வீட்டில் நிலையாக பெருகி வளம் தரும். ஆடி வெள்ளி! ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த…
-
குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வம்.
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிகள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழி பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,…
-
ஆனந்த வாழ்வை தரும் ஆனித் திருமஞ்சனம்!
ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம். திருமஞ்சனம் என்றால் மகாபிஷேகம்! திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை…
-
பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கம்.
தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோரப்பகுதியில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது.இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி சுற்றுலா பயணிகள் வங்காள விரிகுடா கடலின் அழகு மற்றும் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆகியவற்றையும், பரங்கிப்பேட்டை பிச்சாவரம் பகுதியில் உள்ள அடர்ந்த சுரப்பண்ணை காடுகளையும் அங்கிருந்து கண்டு ரசித்து வந்தனர்.ஒவ்வொரு வாரமும் ஏராளமான மக்கள் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2004ம் ஆண்டு…
-
பிரபலமாகும் டிராகன் பழம்.(DRAGON FRUIT)
தற்போது பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிகளில் ரோஸ் மற்றும் சிவப்பு கலரில் சப்பாத்திக்கள்ளி போல காணப்படும் பழம் பிரபலமாக விற்கப்படுகிறது. இதன் பெயர் டிராகன் பழம்(Dragon fruit)என கூறப்படுகிறது. இது கள்ளியின தாவரத்தில் விளையும் பழமாகும்.இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் இன்று உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி சாப்பிடும் பழமாக டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது. உலகில் வெப்ப மண்டல பகுதிகளில் இப்பழம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் முற்றிலும்…
-
சிதம்பரத்தில் அவதூத சுவாமிகள் ஜீவசமாதி.
தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் பல மகான்கள் இங்கு தவமிருந்து இறைவனடி சேர்ந்துள்ளனர்.அப்படி பல காலம் சிதம்பரத்தில் தவமிருந்து இறைவனடி சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீஅவதூத சுவாமிகள். அவதூத சுவாமிகள் பல காலம் இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும் சுற்றித்திரிந்தும் தவத்தில் ஈடுபட்டும் இருந்து வந்துள்ளார்கள். இமயமலையில் அவதூத சுவாமிகளின் குரு அவரை சிதம்பரம் செல்லுமாறு கூறியுள்ளார்கள். அப்போது குருவின் உத்தரவுபடி சிதம்பரம் புறப்பட்ட அவதூத சுவாமிகள் சிதம்பரம் வரும் வழியில் திருக்கோவிலூரில் உள்ள ஞானானந்தகிரி தபோவனத்தில் சில காலம் தங்கியிருந்தார்.…
-
நெய்வேலி மாநகரில் பளிங்கு சபையில் அருள் பாலிக்கும் நடராஜர்.
சிதம்பரம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆடல்வல்லான் அருள்பாலிக்கும் நடராஜர் கோயில் தான். அதுபோல நெய்வேலி என்று சொன்னாலே நிலக்கரி நிறுவனமும், மிகப்பெரிய நடராஜர் சிலையும் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் உலோகச்சிலை இக்கோயிலில் அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 7அடி உயரத்தில் சிவகாமி தேவியின் சிலையும் இக்கோயிலில் அழகுற காட்சி தருகிறது. ஐவரால் அமைந்த பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகம். நெய்வேலியில் நடராஜர் கோயில் அமைந்ததே மிகவும் சுவாரஸ்யமானது.…