Category: Uncategorized

  • கார்த்திகை தீபத்தை காண வரும் சித்தர்கள்!

    பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது. திருவண்ணாமலை ஜோதி தரிசன காட்சி கிட்டுமாயின் அந்த ஒலிக்கதிர் உடம்பின் வழியே ஆன்மாவை ஊடுருவி கர்ம வினைகளை அழிக்கும். மலையின் உள்ளிருந்து சிவந்த ஜோதி கதிர்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அது புண்ணிய ஆத்மாக்களுக்கு கிடைக்கின்ற அருட்காட்சியாகும்.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய என்று…

  • சனி கிரக தோஷம் நீக்கும் திருவாலங்காடு வடராண்யேஸ்வரர் திருக்கோயில்!

    முற்காலத்தில் திருவாலங்காடு ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இக்காட்டில் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இக்கோயில் மூலவர் பெயர் வடராண்யேஸ்வரர்.(வடம் -ஆலமரம், ஆரண்யம்-காடு, ஈஸ்வரர்-சிவபெருமான்). இதனால் இக் கோயில் மூலவருக்கு வடராண்யேஸ்வரர் என்ற திருப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் இறைவன் ஊர்த்துவ தாண்டவம் நடனமாடியதால் ஊத்துவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்குகிறது திருவாலங்காடு. திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக…

  • வராக அவதாரத்தில் பூவராகப் பெருமாள்!

    ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயில் என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும்.ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. விருத்தாசலம்,சிதம்பரத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன.ஸ்ரீரங்கம், திருப்பதி,…

  • மயூரநாதரை தரிசித்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்!

    தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை நகரில் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீ மயூரநாதர் கோவில். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத்தலங்களில் அமைந்துள்ள சிவஸ்தலமாகும்.புராண காலத்தில் மயிலாடுதுறை தென்மயிலை, பிரம்மபுரம்,சிகண்டிபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவன் மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகின்றார்.பழமை வாய்ந்த இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை 256 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து…

  • திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாட சிவபெருமான் கைப்பட எழுதிய இடம் தில்லை.

    “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” எனக் கூறப்படுவதுண்டு.திருவாசகம் என்னும் தேன் அமுதை மாணிக்கவாசகர் பாட அதனை வேதியர் உருவில் வந்த சிவபெருமான் எழுதிய இடம் தில்லை திருப்பெருந்துறை. பாண்டிய நாட்டின் வைகறை ஆற்றின் கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படுபடுபவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் இந்த சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும். பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சர் பதவி வகித்த வாதவூரார்!…

  • திருமுறை காட்டிய பொள்ளாப் பிள்ளையார்!

    ஆன்மா லயிக்கும் இடமான கோயிலை நம் முன்னோர்கள் கட்டிக் காத்து வந்துள்ளனர். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஔவையார். “தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் சைவ மதம் பல ஆண்டுகளாக நின்று தழைத்து உள்ளது. அப்படிப்பட்ட சைவ மதத்திற்கு ஆதாரம் தேவாரம். தேவாரத்திற்கு மூலாதாரம் பொல்லாப் பிள்ளையார். பொல்லா என்றால் உளியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றியது என்பார்கள். தானாக தோன்றியவர் பொல்லாப் பிள்ளையார். பொள்ளாப் பிள்ளையார் தோன்றிய இடம் திருநாரையூர்! பொல்லாப் பிள்ளையார்…

  • பதஞ்சலி முனிவர் ஸ்தாபித்து பூஜை செய்த ஸ்ரீ அனந்தீஸ்வரர்.

    தில்லை, புலியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த தலம்தான் `ஸ்ரீஅனந்தீஸ்வரர்’ கோயில். இந்த கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலை விட மிகப் பழமைவாய்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இக் கோயிலில் மூலவர் ஸ்ரீ அனந்தீஸ்வரர், பின்னால் நாகத்துடன் காட்சியளிப்பார். தனி சந்நிதியில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயில் தினமும்…

  • இறைவன் அந்தணர் வேடத்தில் தோன்றி வழிகாட்டிய தலம் கூடலையாற்றூர்!

    தமிழ்நாட்டில்,கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு குமாரகுடி வழியாக காவாளகுடி கிராமத்தை அடுத்து கூடலையாற்றூர் கிராமம் உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூடலையாற்றூர். மணிமுத்தாறும், வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ளதால் கூடலையாற்றூர் என பெயர் பெற்றது. சுந்தரருக்கு இறைவன் அந்தணராக காட்சி அளித்தார்! சுந்தரர் தனது அடியார்களுடன் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கூடலையாற்றூர் தலத்தை கடந்து செல்லும் போது ஒரு முதிய அந்தணர் சுந்தரரை எதிர்கொண்டார். சுந்தரர் அவரை…

  • தில்லை நடராஜர்,திருவாரூர் தியாகராஜர்! அபூர்வ ஒற்றுமைகள்!!

    சைவ சமயப் பேருலகின் இரண்டு ராஜாக்களான தில்லை நடராஜருக்கும், திருவாரூர் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம். தில்லை நடராஜர்,திருவாரூர் தியாகராஜர் ஆகிய இருவரும் ஆதிரை நாளில் விழா காண்பவர்கள். திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு,தேர் ஏறி வலம் வந்து ராஜசபையில் அபிஷேகம் கண்டு சித்சபைக்கு எழுந்தருள்கிறார். தில்லை நடராஜர்திருவாரூர் தியாகராஜர் இருவருமே தேரில் மட்டும்வலம் வருபவர்கள்.அதன் பிறகு இருவருக்கும் பெரிய மகாபிஷேகம் நடைபெறுகிறது. தில்லை…

  • கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தங்கள்!

    தமிழ்நாட்டில் கங்கைக்கு நிகரானபுண்ணிய தீர்த்தங்கள் நிறைய உள்ளன. அவற்றில் நீராடினால் கங்கையில் நீராடிய முழு பலனை பெறலாம்.காசி என்றதும் நினைவிற்கு வருவது கங்கை நதி.வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட வேண்டும் என்பது இந்துக்களின் ஆவல்.புனித கங்கையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது நமது நம்பிக்கை. காசிக்குச் சென்று கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்தங்களில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன்கள் கிட்டும் என கூறப்படுகிறது.அந்த வகையில்…