சிதம்பரம் அருகே வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர்.


கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு!

சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் பாய்ந்து ஓடும் காவிரி நீர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் திருச்சி மாவட்டம் கல்லணை, தஞ்சை மாவட்டம் கீழணை வழியாக கடலூர் மாவட்டம் கடைமடை பகுதியாக உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் அதிக அளவில் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. சுமார் ஒன்றரை லட்சம் கண அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கொள்ளிடம் வழியாக நாகை மாவட்டம் கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. இதனால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஓடும் காவிரி நீர்.