சிதம்பர ரகசியம்


ரகசியமான விஷயம் ஏதேனும் இருந்தால் பேச்சுவாக்கில் அது சிதம்பர ரகசியம் என்பார்கள். சிதம்பரத்தின் சிறப்புகளில் மிக முக்கியமானது சிதம்பர ரகசியம். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் அருள் பாலித்து வருகிறார்.

ரகசியம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அம்பிகையுடன் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் அருள் பாலித்து வருகின்றார். நடராஜரின் வலப்புறத்தில் சிதம்பர ரகசியம் அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் சித் சபையில் அருள் பாலித்து வரும் நடராஜரின் இடது பக்கத்தில் சிவகாமசுந்தரி அம்பிகையும், வலது பக்கத்தில் சிதம்பர ரகசியமும் அமைந்துள்ளது. சிதம்பர ரகசியம் இறைவனின் மூன்று நிலைகளில் ஒன்றான அருவநிலையை குறிக்கும் இத்தலம் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவதால் இறைவனை மந்திர ரூபமாக எந்திரமாக நிறுவியுள்ளனர். நடராஜரின் வலப்புறத்தில் சிதம்பர ரகசியம் எந்திரம் சக்கரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது திரை உள்ளது. இந்த திரை அகற்றப்பட்டதும் தங்கத்தினால் ஆன வில்வ மாலை தெரியும். ஒவ்வொரு கால பூஜையின் போது இந்த திரை விலக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. அங்கே என்ன இருக்கிறது என பார்த்தால் ஆகாயம் போன்று தெரியும். இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பது தான் சிதம்பர ரகசியம். இறைவன் ஆகாயம் போல் பறந்து விரிந்தவன் ஆகாயத்திற்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. இறைவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தமாகும்.