சந்திர தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்!


சந்திர தரிசனம் கண்டால் தீரா நோய்கள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும். ஏனெனில் சந்திரனுக்கும், ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் சந்திரனை  மறக்காமல் தரிசனம் பண்ணுங்க.

சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம்!

சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவ புண்ணியமாகும். கோயிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் செய்யலாம். வானத்தில் சில நொடிகள் காட்சி தரும் பிறை சந்திர தரிசனமே, மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திரனையே சூடி “சந்திரமவுலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை சந்திர தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல சாட்சாத் பரமேஸ்வரனின் திருமுடியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். வளர்பிறை சந்திரனை தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சந்திர தரிசன பலன்கள்!

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் 3ஆம் நாள் மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30மணியளவில் தோன்றும் பிறையாகும்.  சந்திரனே மனதிற்கு அதிபதியாகும். சரீர பலம், மனோபலம் ஆகிய இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தை போக்கும் என்பார்கள். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

பார்வை கோளாறுகள் நீங்கும்!

சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், செல்வமும் மகிழ்ச்சியும் கிட்டும். பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பார்வை கோளாறுகள் நீங்கும்.

ஆயுள் விருத்தியாகும்!

சந்திரனை தரிசிக்கும் நேரத்தில் கையில் காசு வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒருமுறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும்.. சந்திர தரிசனம் காண்பதற்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். இந்த பிறை நாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. மூன்றாம் பிறை தெய்வீக அம்சம் பொருந்தியது. அந்த பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும், செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.  அவரவர் வீட்டிலிருந்தே சந்திரனை தரிசனம் செய்து வணங்குங்கள். நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.