தற்போது பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிகளில் ரோஸ் மற்றும் சிவப்பு கலரில் சப்பாத்திக்கள்ளி போல காணப்படும் பழம் பிரபலமாக விற்கப்படுகிறது. இதன் பெயர் டிராகன் பழம்(Dragon fruit)என கூறப்படுகிறது. இது கள்ளியின தாவரத்தில் விளையும் பழமாகும்.இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் இன்று உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி சாப்பிடும் பழமாக டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது. உலகில் வெப்ப மண்டல பகுதிகளில் இப்பழம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் முற்றிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாக சிலர் கருதுகிறார்கள். இந்தியாவிலேயே பல மாநிலங்களில் விளைந்து வரும் இத்தாவரம் வளர்ந்து வருகிறது. இப்பழம் வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில், நீர் அதிகம் தேவைப்படாத தாவரமாகும். இந்தியாவில் ஆந்திரா,கர்நாடகா,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் டிராகன் பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
15 மாதங்களில் காய்க்க தொடங்கும்.
டிராகன் பழம் குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், குறைந்த நிலப்பரப்பில் நீர் அதிகம் தேவையின்றி இத்தாவரம் வளர்கிறது. தகுந்த கவனிப்பும், பராமரிப்பும் இருந்தால் சுலபமாக வளரக்கூடியது என்றும் தேவையான அளவு பழங்களை தரும் தாவரம். ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்து சுமார் 1800 செடிகள் வரை வளர்க்கலாம். இத்தாவரம் வளர்வதற்கு சூரிய வெளிச்சம் மிகவும் தேவை.இது தாவரங்கள், பூச்சிகளும் தாக்கும் அபாயம் குறைவு. 15 மாதங்களுக்குள் காய்க்க தொடங்கும். மூன்றாண்டில் முழுமையான அளவில் பழங்களை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 டன் பழங்கள் வரை கிடைக்கும். இந்த பழங்களை விவசாயிகள் நேரடியாக பழக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு விற்பனை செய்கின்றனர்.மார்க்கெட்டில் ரூ.250 முதல் 300 வரை விற்க்கப்படுகிறது.இறக்குமதி செய்யும் பழங்களை விட நம் நாட்டு பழங்களுக்கு சுவையும்,இனிப்பும் அதிகம் என்றார். தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது.
டிராகன் பழத்தின் நன்மைகள்!
டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இப்பழம் உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க உதவுகிறது. உடலின் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. டிராகன் பழத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் அபாயகரமான LDL கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. டிராகன் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. டிராகன் பழத்தில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இப்பழம் அதிகப்படியாக நீர் சத்தை கொண்டுள்ளதால் அது சருமத்தை ஈரப்படுத்தும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணலாம்.