வளர்பிறை அஷ்டமி.


சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபால்வண்ணநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி.

சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவரை வழிப டுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோ றும் வரும் அஷ்டமி தினங்கள்.வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.

அஷ்டமி தினம் அன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமா கும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.வளர்பிறை அஷ்டமி தினம் பைரவருக்கு விரதமிருந்து, பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும், வணங்குவதும் சிறப்பாகும்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அறுபத்து மூவர் சன்னதியில் உள்ள காலபைரவர்.

வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப் பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பண வரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும்.உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.