விவசாய நிலங்களில் ஏற்படும் விஷக்கடிகள் குறித்து அடிப்படை உயிர்காக்கும் செயல்முறை பயிற்சி!


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவசர மருத்துவத் துறை (Department of Emergency Medicine) சார்பில் விவசாய நிலங்களில் ஏற்படும் விஷகடிகள் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு, செயல்முறை பயிற்சி
மற்றும் அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி செயல்முறை பயிற்சி  நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் என்.பாஸ்கர் தலைமை வகித்து பேசினார்.

விவசாய நிலங்களில்  ஏற்படும் விஷகடிகள் குறித்து அடிப்படை உயிர்காக்கும் செயல்முறை பயிற்சியை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.என்.பாஸ்கர் தொடங்கி வைத்தார்!

மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் என்.
ஜூனியர் சுந்தரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக அவசர சிகிச்சை பிரிவு தலைவர் வி.திருச்செல்வன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பெ.ரவிந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் டாக்டர் பாலாஜி சுவாமிநாதன், டாக்டர் சசிகலா, உறைவிட மருத்துவர்கள் ஆர். பாரி, டபுள்யு.அசோக் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என் பாஸ்கர் பேசினார். அருகில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தால் எவ்வித முதலுதவி செய்வது மருத்துவக் சிகிச்சைகள் குறித்து டாக்டர் திருஞானம் விளக்கி கூறினார்! நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர்கள் திருச்செல்வன், திருஞானம், யக்னேஸ்வரராஜா, விவேக், கிரிதரன், பிரசாந்த்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் ஏற்படும் விஷக்கடிகள் குறித்து அடிப்படை உயிர் காக்கும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.