சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்ட கொலு!


சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொலு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு அமைக்கப்படுவது வழக்கம். கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 21 படி உயரத்தில் 21 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவை நடராஜர் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசித்து வருகின்றனர். தினமும் இரவில் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்புள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறுகின்றன. கொலுவில் ஸ்ரீ நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார்  4 ஆயிரத்திற்கும் மேலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.  நவராத்திரி கொலு குறித்து கோயில் டிரஸ்டிகளில் ஒருவரான உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தாவது, நவராத்திரியில் ஒரறிவு முதல் ஆறறிவு உள்ள மனிதன் வரை உள்ள உயிரினங்களின் பரினாம வளர்ச்சிகளை விளக்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என தெரிவித்தார்.