சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா உற்சவ ஆச்சாரியார் தேர்வு!


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா உற்சவ ஆச்சாரியாராக தேர்வு செய்யப்பட்ட கு.ராஜகணேச தீட்சிதர்!

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா திருவிழா உற்சவ ஆச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு 2 திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடைபெறும். ஒவ்வொரு திருவிழாவிற்கும் சுழற்சி முறையில் ஒரு தீட்சிதர் உற்சவ ஆச்சாரியாராக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கோயிலில் தீட்சிதர்களால் திருவுளச் சீட்டு மூலம் உற்சவ ஆச்சாரியார் தேர்ந்தெடுக்கப்படுவார். பத்து தினங்கள் நடைபெறும் திருவிழாவிற்கு கொடியேற்றுவது முதல் தேரோட்டம், மகாபிஷேகம், தரிசன விழா உள்ளிட்டவைகளை உற்சவ ஆச்சாரியார் முன்னின்று செய்வது வழக்கம். தற்போது மார்கழி மாத ஆருத்ரா திருவிழாவிற்கு பொது தீட்சிதர்களால்  திருவுளச்சீட்டு மூலம் உற்சவ ஆச்சாரியாராக கு.ராஜகணேச தீட்சிதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.